"இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் தான்”- அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தென்னிந்தியா தான் கூடுதல் வரி செலுத்துகிறோம்.
"இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் தான்”- அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
Published on

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

வருகின்ற சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தேர்தல் தான். அதற்கு மெட்ரோ விவகாரமே உதாரணம்.

மெட்ரோ போக்குவரத்து நெரிசலை குறைக்க பெரிய மாநகரங்களுக்கு அவசியம் தேவை. வளர்ச்சி வங்கிகள் மெட்ரோ போன்ற திட்டங்களுக்கு உடனடியாக கடன் உதவி கொடுப்பார்கள்.

தென்னிந்தியா தான் கூடுதல் வரி செலுத்துகிறோம். நமது வரியை வைத்து மிகப்பெரிய அரசியல் செய்வது பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம்.

கொடுக்க வேண்டிய ரூ.2,000 கோடி கல்வித்துறை நிதியை கொடுக்காமல் அரசியல் செய்கிறார்கள். ஏதேதோ நிபந்தனைகள் மூலம் மும்மொழிக்கொள்கையை சொல்லி நிதியை கொடுக்க மறுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com