5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும் - திருமாவளவன் திட்டவட்டம்

தவெக அரசிற்கு ஆதரவு நல்கும் எந்த கட்சிகளும் வாக்கு தவற வாய்ப்பில்லை.
Thirumavalavan
Published on

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* நாளை நடைபெறும் தவெக கூட்டணி கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.

* விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பர்.

* தவெக அரசிற்கு ஆதரவு நல்கும் எந்த கட்சிகளும் வாக்கு தவற வாய்ப்பில்லை.

* 5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும்.

* காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும்.

* எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சனைகள் தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com