வேலுமணி அணி வாக்குகள் செல்லுமா? : திருமாவளவன் பேட்டி

முதல்வர் விஜய்யின் அணுகுமுறை தமிழக அரசியலுக்கு புதிது.
வேலுமணி அணி வாக்குகள் செல்லுமா? : திருமாவளவன் பேட்டி
Published on

தமிழக முதலமைச்சர் விஜய் வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் வீட்டிற்கு நேரில் சென்றார். முதல்வரை திருமாவளவன் உற்சாகமாக வரவேற்றார்.

முதல்-அமைச்சர் விஜய்யை வாசலுக்கு சென்று வரவேற்ற திருமாவளவன் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். பின்னர், அரசியலமைப்பு சாசனத்தின் முகப்பு பக்கத்தை முதல்-அமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் வழங்கினார்....

அதன்பின் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

மெஜாரிட்டி டெஸ்டில் வெற்றி பெற வாழ்த்தினேன். ஸ்டாலின், உதயநிதியை சந்தித்ததை குறிப்பிட்டு பாராட்டினேன்.

முதல்வர் விஜய்யின் அணுகுமுறை தமிழக அரசியலுக்கு புதிது. இந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது.

கட்சிப் பொறுப்பின் அடிப்படையில் ராதன் பண்டிட் அரசு பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இருக்கிறது என கருதுகிறோ.

அவரது தலைமையிலான குழுவில் தான் கொறடா இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க வேண்டும் என முதல்வரிடம் கூறினோம்.

எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதாக முதல்வர் விஜய் என்னிடம் கூறினார்.

அதிமுகவில் நடக்கும் உள்கட்சி பிரச்சனை குறித்து நான் கருத்து கூறமுடியாது.

எஸ்.பி. வேலுமணி அணியினர் அளிக்கும் வாக்குகள் செல்லுமா என்பதை சபாநாயகர் தான் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com