‘தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்திலிருந்து எந்தப் பாடமும் கற்றுகொள்ளவில்லை’ - அண்ணாமலை

புதிதாக அமைந்துள்ள தவெக அரசு கொண்டாட்ட மனநிலையல் இருந்து இன்னும் வெளிவரவில்லை.
‘காவல்துறை கடந்த காலத்திலிருந்து எந்தப் பாடமும் கற்றுகொள்ளவில்லை’ - அண்ணாமலை
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன், இன்று அதிகாலை 5 பேர்கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,

“இந்த வீடியோவில் நீங்கள் காண்பது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு சிறுவனின் இரத்தக் கறைகளைத் தான்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலைகாரர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. மாநில காவல்துறை கடந்த காலத்திலிருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

மேலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும், தனது கொண்டாட்ட மனநிலையிலிருந்து இன்னும் வெளிவராமல், களத்தில் அரங்கேறிவரும் கொடூரமான உண்மைகளை எதிர்கொள்ளத் தவறிவருகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com