

பெண்களுக்கான உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
ரூ.2500 எங்கே என பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து அமைச்சர் ஜெகதீஸ்வரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த மருத்துவ முகாமில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறுகையில்," மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தடையின்றி தற்போது வழங்கப்படுகிறது. பெண்களுக்கான உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி விரைவில் வழங்கப்படும்" என்றார்.
எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்கு வழங்கும் பல்வேறு நல திட்டங்களில் முதன்மையாக இருப்பது மகளிர் உரிமை தொகை தான். சட்டமன்ற தேர்தலுக்கு முன்புவரையில் ஆட்சியில் இருந்த திமுக அரசு, கடந்த 2023ம் ஆண்டு செப்டமர்பர் மாதம் முதல் ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்கி வந்தது.
தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் ரூ.2000 வழங்கப்படும் என்றும் தவெக சார்பில் மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதாவது, 60 வயது வரை உள்ள அனைத்து மகளிர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகவும், சுமார் 10 லட்சம் கோடி கடன் இருப்பதால் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில், தவெக ஆட்சியை பிடித்தது முதல் திமுக சார்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், எப்போது பெண்களுக்கான மகளிர் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும் என எதிர்கட்சியின் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில், பெண்களுக்கான உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.