‘காவல்துறையை ஆக்கபூர்வமாக செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சிசெய்ய வேண்டும்’ - உதயநிதி ஸ்டாலின்

சோஃபா மாடல் ஆட்சியில் போலீசாராலும் பாதுகாப்பு இல்லை, போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லை.
‘காவல்துறையை ஆக்கபூர்வமாக செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சிசெய்ய வேண்டும்’ - உதயநிதி ஸ்டாலின்
Published on

காவல் துறையை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க முதலமைச்சர் விஜய் முயற்சிசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,.

“சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.

காவலரிடமிருந்தே தன்னை காப்பாற்றிக்கொள்ள அந்த சிறுவன் காவல் நிலையத்திற்கு ஓட வேண்டிய நிலையில்தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு உள்ளது.

இதுமட்டுமல்ல, வேளச்சேரியில் நடைபயிற்சிக்கு செல்ல வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடுமையும் நடந்துள்ளது.

கும்பகோணத்தில் ஆளும்கட்சியினர் தாக்கியதில் போலீசாரின் கை உடைந்ததாகவும் தகவல்.

இந்த சோபா மாடல் ஆட்சியில் போலீசாராலும் பாதுகாப்பு இல்லை, போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லை.

ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எம்.எல்.ஏக்களை பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு, தன்னுடைய கட்டுபாட்டில் இருக்கும் காவல்துறையை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யவேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com