

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களைக் கவர்வதற்காக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டீக்கடைகளில் டீ ஆற்றுவது, ஹோட்டல்களில் தோசை ஊற்றுவது மற்றும் வடை சுடுவது போன்ற செயல்கள் மூலம் பொதுமக்களைச் சந்திக்கின்றனர். அந்தவகையில் தவெக வேட்பாளர் ஒருவர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரசாரம் மேற்கொண்டது தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
தவெக சார்பில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் வினோத் என்பவர், ஹாலோகிராம் தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக விஜய்யை நேரில் கொண்டு வந்ததை போல, அவரது மாதிரியை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக பேசிய அவர்,
‘நாங்கள் விஜய் பேசுவதுபோல ஏஐமூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். விஜய்யின் முகத்தை காட்டினாலே ஒரு பிராண்ட். அந்த தளபதியே எங்கள் உடன் இருப்பதுபோன்ற இந்த முறையை மக்கள் வரவேற்கின்றனர்’ என தெரிவித்தார்.