மயிலாப்பூர் தொகுதியில் ஐடி கார்டு இல்லாமல் ஓட்டு போடுவதாக தமிழிசை புகார்

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார்.
மயிலாப்பூர் தொகுதியில் ஐடி கார்டு இல்லாமல் ஓட்டு போடுவதாக தமிழிசை புகார்
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ஐடி கார்டு இல்லாமல் ஓட்டு போடுவதாக தமிழிசை சௌந்தரராஜன் புகார் தெரிவித்தார்.

தமிழிசை கூறுவது தவறு, வாக்காளர் அடையாக அட்டையுடன் தான் சென்றோம் என மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட உள்ளதாக தெரிவித்த தமிழிசை, தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com