TVK | 200 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி... செங்கோட்டையன் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன நறுக் கமென்ட்

200 தொகுதிகளில் வெற்றி என்பதெல்லாம் ஓவரான சத்தம்.
TVK | 200 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி... செங்கோட்டையன் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன நறுக் கமென்ட்
Published on

தமிழக சட்டசபை தேர்தல் 2026-இல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 200-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சி நிர்வாகியான செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இவரது கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிற மே 04-ஆம் தேதி வரை அவர்கள் கனவு காணட்டும் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "செங்கோட்டையன் 200+ தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெறும் என்று பேசியுள்ளார். அவர்கள் மே 04-ஆம் தேதி வரை கனவு காணட்டும். ஓட்டை பிரிப்பார், ஸ்பாயிலராக இருப்பார் என்றால் எனக்கு மாற்று கருத்து இல்லை.

ஒரு சில இடங்களில் வெற்றி பெறுவார் என்று சொன்னால் கூட மாற்று கருத்து இல்லை. ஆனால் 200 தொகுதிகளில் வெற்றி என்பதெல்லாம் ஓவரான சத்தம். இது சாதாரண சத்தம் இல்லை.

வெடிகுண்டு சத்தம் மாதிரி என்று சொல்கிறார். அந்த அளவுக்கு விசிலின் சத்தம் இருக்காது. விசில் சத்தம் ஓரளவு தான் கேட்கும். கனவு காண்பதற்கு எல்லோருக்கும் தகுதி இருக்கிறது.

அதனால் வரும் 4 ஆம் தேதி வரை அவர்கள் கனவு காணட்டும். 200-க்கு மேற்பட்ட தொகுதிகள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். தற்போது ஆன்மீக தலங்களை தேடி செல்லும் விஜய் அதன்பிறகு ஷூட்டிங்கிற்கு இடம் தேடி செல்வாரோ என்று சந்தேகமாக உள்ளது,” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com