உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி- விஜய்

அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மே தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.உழைப்பாளர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்!
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி- விஜய்
Published on

சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மே தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்! என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com