கிருஷ்ணகிரியில் நாளை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரம்

பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளா் என்.நரசிம்மனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக இரவு 7 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் கலந்து கொள்கிறார்.
கிருஷ்ணகிரியில் நாளை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரம்
Published on

சென்னை:

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் அவா் அங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் நாளை காலை 10.30 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளா் என்.நரசிம்மனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

மீண்டும் ஹெலிகாப்டரில் பெங்களூர் செல்லும் அவா் பின்னா் அங்கிருந்து சென்னை விமான நிலையம் வரவுள்ளாா். கிண்டியில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் மாலை 3 மணி அளவில் பல்வேறு சமுதாய தலைவா்களுடன் கலந்துரையாடுகிறார்.

தொடா்ந்து, ஹெலிகாப்டரில் திருவண்ணாமலைக்குச் செல்லும் அவா் பா.ஜ.க. வேட்பாளா் அஸ்வத்தாமனுக்கு ஆதரவாக மாலை 4 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் ஈடுபடுகிறார்.

மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டரில் வரும் அவா், தாம்பரத்தில் த.மா.கா. வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக இரவு 7 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் கலந்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com