1 மக்களவை + 1 மாநிலங்களவை தொகுதி கேட்க த.மா.கா. முடிவு

நாளை பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்.பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.
1 மக்களவை + 1 மாநிலங்களவை தொகுதி கேட்க த.மா.கா. முடிவு
Published on

சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாலை உடனான சந்திப்பிறகு பிறகு அவர் கூறியிருப்பதாவது:-

பாஜக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்கிறது.

நாளை பிரதமர் மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com