மதுரை மத்திய சிறையில் உள்ள ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி மகனின் பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும்படி தமிழக முதல்வர் மற்றும் நீதித்துறைக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் தற்போது அவருக்கு பரோல் கிடைத்துள்ளது.
ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்
Published on

மதுரை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில், ரவிச்சந்திரன் என்பவர் மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது தாயார் ராஜேஸ்வரி மகனுக்கு பரோல் கோரி விண்ணப்பித்து இருந்தார். இதன் அடிப்படையில் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்ப நாயக்கன் பட்டியில் வசிக்கும் தாயார் ராஜேஸ்வரி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

ரவிச்சந்திரனின் பரோல் காலம் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை, மதுரை மத்திய ஜெயிலில் நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.

இதற்கிடையே ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி மகனின் பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும்படி தமிழக முதல்வர் மற்றும் நீதித்துறைக்கு விண்ணப்பித்து இருந்தார்.

இதன் அடிப்படையில் ரவிச்சந்திரன் பரோல் மேலும் ஒரு மாத காலம் வரை நீட்டிப்பு செய்யபட்டு உள்ளது.

அதன்படி ரவிச்சந்திரன் அடுத்த மாதம் 15-ந் தேதி மத்திய ஜெயிலுக்கு வர வேண்டும் என்று உத்தரவு அனுப்பப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com