சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.500 ஆக உயர்வு- அரசாணை வெளியீடு

ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசு இதற்காக இப்போது ரூ.3 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.500 ஆக உயர்வு- அரசாணை வெளியீடு
Published on

சென்னை:

சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம், காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதுபற்றி சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில், அரசு இதற்காக இப்போது ரூ.3 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com