முதலமைச்சரின் தனிக் கருணையில் இன்று புதிதாய் பிறந்தேன்- நாஞ்சில் சம்பத் டுவிட்டர் பதிவு

நாஞ்சில் சம்பத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் பேசி நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, உரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முதலமைச்சரின் தனிக் கருணையில் இன்று புதிதாய் பிறந்தேன்- நாஞ்சில் சம்பத் டுவிட்டர் பதிவு
Published on

நாகர்கோவில்:

இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

நாஞ்சில் சம்பத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் பேசி நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் நாஞ்சில் சம்பத் உடல் நலம் பெற்று சுயநினைவு பெற்றார். இதனையடுத்து அவர், டுவிட்டரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், முதல்வரின் தனிக் கருணையில் இன்று புதியாய் பிறந்தேன். முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com