வாராது வந்த சந்திப்பும்... வாராது வந்த மழையும்...

மகன் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபுவுடன் வந்த மு.க.ஸ்டாலின் நேராக ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குள் சென்றார்.வருகிற 20-ந்தேதி சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் இருவரும் சந்தித்து இருப்பது எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது.
வாராது வந்த சந்திப்பும்... வாராது வந்த மழையும்...
Published on

சென்னை நேற்று ஒரு விசித்திரமான காட்சியை பார்த்தது. அதாவது எதிர்பாராத சந்திப்பும். எதிர்பாராத மழையும்தான் அது.

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைந்து ஒரு மாதம் ஆகி விட்டது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மு.க.ஸ்டாலின் வருகிறார் என்றதும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தினமும் மாலையில் அந்த வழியாகத்தான் மு.க.ஸ்டாலின் காரில் நடைபயிற்சிக்காக செல்வார். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு வந்ததுதான் அதிசயமாக பார்க்கப்பட்டது.

கொளுத்திய வெயிலும் மறைந்து கொட்டியது மழை. மகன் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபுவுடன் வந்த மு.க.ஸ்டாலின் நேராக ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குள் சென்றார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்ததும் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, 'இரங்கல் தெரிவித்து வந்தோம். நேரில் வந்ததற்காக அவரும் நன்றி தெரிவித்தார்' என்றார்.

காரில் ஏறிய மு.க.ஸ்டாலினை பார்த்ததும் 'எடப்பாடி பழனிசாமியை கைது செய்யுங்கள்' என்று ஒரு அம்மணி கோஷம் போட்டு தன் பங்கு விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

வருகிற 20-ந்தேதி சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் இருவரும் சந்தித்து இருப்பது எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com