அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார்.செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Published on

சென்னை:

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com