படுக்கை அறையில் பேனா கேமராவை பொருத்தி பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த மருத்துவ மாணவர்

வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
படுக்கை அறையில் பேனா கேமராவை பொருத்தி பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த மருத்துவ மாணவர்
Published on

ராயபுரம்:

சென்னை ராயபுரம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 2-வது தளத்தில் 9 வயது மகனுடன் குடியிருந்த இவரது கணவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

நேற்று காலையில் இவர்கள் வசித்து வந்த வீட்டின் படுக்கை அறையில் புதிதாக பேனா ஒன்று இருந்ததை பெண் பார்த்துள்ளார். அதில் கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

இதையடுத்து வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.

அப்போது அதில் தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. உடை மாற்றும் காட்சிகளும், மேலும் பல வீடியோக்களும் பதிவாகி இருந்தன.

இதையடுத்து ராயபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கணவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்.

அப்போது வீட்டின் உரிமையாளரின் மகனான இப்ராகிம் படுக்கை அறையில் பேனா கேமராவை பொருத்தி இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இப்ராகிம் மருத்துவ மாணவர் என்பது தெரிய வந்தது. சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.டி.எஸ். இறுதியாண்டு படித்து வரும் இவர், வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com