அமர் பிரசாத் ரெட்டிக்கு நவ.3 வரை காவல்

பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் உட்பட 5 பேரை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீசார் கைது செய்தனர்.
அமர் பிரசாத் ரெட்டிக்கு நவ.3 வரை காவல்
Published on

சென்னை:

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய போது பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜே.சி.பி. எந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் உட்பட 5 பேரை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நவ.3-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com