

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. ஏற்கனவே 10 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்று பெற்றது.
இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக, சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு 33,369 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவான விஜய் தமிழன் பார்த்திபன் பொறுப்பேற்றுள்ளார்.
ஆரம்ப காலங்களில் சேலம் பகுதியில் பிரௌசிங் சென்டர் நடத்தி வந்த இவர் பழைய பேருந்து நிலையத்தில் சிறியதாக மொபைல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார்.
விஜய் மக்கள் இயக்கத்தில் இணைத்து சமூக சேவைகளை செய்து வந்த இவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர் அவார். சில விஜய் படங்களுக்கு சேலம் மாவட்ட விநியோகஸ்தராக இருந்துள்ளார்.
விஜயின் 15 படங்களில் சிறிய வேடத்தில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் போக்குவரத்து காவலராக நடித்திருந்தார்.
இவ்வாறு தன்னுடன் தொடர்ச்சியாக பயணித்ததன் காரணமாக, தன்னுடைய அமைச்சரவையில் அவருக்கு விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளார்.