

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்கள் வென்ற காங்கிரஸ் நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில், சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் இன்று ஆதரவு தெரிவித்தன. 2 இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விஜய் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார். இந்த சூழலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 இடங்களை வென்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உடன் ஏற்கனவே தவெக எம்எல்ஏ அருண்ராஜ் சந்தித்தபோது ஆதரவு தர ஐயுஎம்எல் மறுத்தது. நேரடியாக ஸ்டாலின் இடமே கேட்கலாமே என காதர் மொய்தீன் அருண்ராஜிடம் தெரிவித்தார். அதற்கு அவர், நீங்களே கேளுங்கள் என கூறியதாக காதர் மொய்தீன் பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் ஐயுஎம்எல் நேற்றும் இன்றும் நாளையும் திமுகவுடன் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தவெக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த சூழலில் ஐயுஎம்எல், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 118 தேவைப்பட்ட நிலையில், தவெக ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது. ஐயுஎம்எல்யும் கம்யூனிஸ்ட் கட்சிகளை போல வெளியில் இருந்து ஆதரவு என்றே தெரிவித்துள்ளது.
முன்னதாக புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.