மு.க.ஸ்டாலின் ராஜினாமாவைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை கலைப்பு!

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவை மே.5ம் தேதி கலைக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் ராஜினாமாவைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை கலைப்பு!
Published on

தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவை மே 5ம் தேதியுடன் கலைக்கப்பட்டதாக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், அரசியல் சாசன நடைமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் 23-ல் நடைபெற்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்றுள்ளது.

விரைவில் இக்கட்சி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், நேற்று முதலைமச்சர் மு.க.ஸ்டாலினின் ராஜினாமாவைத் தொடர்ந்து சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.17-வது சட்டப்பேரவை விரைவில் அமையவுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com