

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்துக்கு காங்கிரஸ் ஆதரவை அளித்ததை தொடர்ந்து த.வெ.க.வின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மாலை கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். இருப்பினும் ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை.
ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று கேரளத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று கேரளத்திற்கு பயணம் மேற்கொள்ள இருந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நண்பகல் 12 மணிக்கு ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.