தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!
Published on

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பி.எஸ். ராமன் இரண்டுமுறை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பதவிவகித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பி.எஸ். ராமன் தலைமை வழக்கறிஞராகப் பதவி வகித்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முக சுந்தரம் ராஜினாமா செய்த நிலையில், 2024ஆம் ஆண்டு மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது. நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com