தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!

தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெண்டர் ரத்து.
TN Secretariat
Published on

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.

தூய்மை பணியை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் தமிழக அரசு கோரியிருந்தது.

இந்நிலையில், தனியார் மயமாக்குவது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

தூய்மை பணியை தனியார் மயமாக்க தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என தூய்மை பணியாளர்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com