பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம்

இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக ஈடுபடுகிறது.காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்க வேண்டும்.
பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம்
Published on

சென்னை:

தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக ஈடுபடுகிறது. அதற்கு துணை போகும் வகையில் சில கட்சிகளும் ராகுலை பிரதமராக ஏற்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த வேண்டும். அதை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி தேவையில்லை. காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்க வேண்டும். அகில இந்திய கட்சியாக இருந்து கொண்டு மாநிலக் கட்சிகள் வளர காங்கிரஸ் துணைபோக கூடாது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com