ஜலபிரதட்சணம்.. விஜய் முதல்வர் ஆனதால் தண்ணீரில் மிதந்து வேண்டுதலை நிறைவேற்றிய தவெக எம்எல்ஏ

சுமார் 2000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெங்கடேசனை வீழ்த்தி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
ஜலபிரதட்சணம்.. விஜய் முதல்வர் ஆனதால் தண்ணீரில் மிதந்து வேண்டுதலை நிறைவேற்றிய தவெக எம்எல்ஏ
Published on

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மை இல்லாததால், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த மே 10 விஜய் முதல்வராக பதவியேற்றார்.

இந்த தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் எம்வி கருப்பையா என்பவர் சுமார் 2000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெங்கடேசனை வீழ்த்தி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

விஜய் முதல்வர் ஆனால் அங்கப்பிரதட்சணம் போல ஜலபிரதட்சணம் செய்வதாக வேண்டியிருந்தார். வேண்டுதல் பளித்த நிலையில் உள்ளூர் கிணறு ஒன்றில் தவெக கொடியுடன் தண்ணீரில் மிதந்து வேண்டுதலை நிறைவேற்றினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் தவெக ஆட்சி அமைத்ததும் தற்காலிக சபாநாயகராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பித்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com