திரையரங்குகளில் இனி 5 காட்சிகள்..!- தமிழக அரசு உத்தரவு

தமிழ் திரைப்படங்கள் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் இனி 5 காட்சிகள்..!- தமிழக அரசு உத்தரவு
Published on

1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதி 14-ஏ பிரிவின் கீழ், திரையரங்குகள் ஒரு நாளைக்கு நான்கு வழக்கமான காட்சிகளை திரையிட்டு வருகிறது.

ஐந்தாவது சிறப்புக் காட்சி உள்ளூர் பண்டிகை நாட்களிலும், மாவட்ட ஆட்சியர்கள் அல்லது சென்னை காவல் ஆணையர் ஒப்புதலுடன் பொது விடுமுறை நாட்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தினமும் ஐந்து நாள் காட்சிக்கு அனுமதி அளிக்கும்படி, மே 16 அன்று நடந்த கூட்டத்தில் திரையுலக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

Five shows permitted for Theatres in tamilnadu

இதையடுத்து புதிதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களுக்கு, முதல் ஏழு நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டங்களில் கூடுதல் காட்சியை திரையிடுவதற்கு, உரிமம் வழங்கும் அதிகாரிகளிடமிருந்தோ அல்லது மாநில அரசிடமிருந்தோ திரையரங்கு உரிமையாளர்கள் அனுமதி பெறத் தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com