தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்

சாய்குமார் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக பணியாற்றியவர்.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்
Published on

சென்னை:

தமிழக சட்டசபைக்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனிடையே பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, தேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றி சாய்குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சாய்குமார் உடனடியாக பதவியேற்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சாய்குமார் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக பணியாற்றியவர்.

மேலும் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com