தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம்.. 2025 இல் பெற்ற விருதை முதல்வர் விஜயிடம் காண்பித்த அதிகாரிகள்!

முதல்வர் விஜயிடம் அதிகாரிகள் காண்பித்து வாழ்த்து பெற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம்.. 2025 இல் பெற்ற விருதை முதல்வர் விஜயிடம் காண்பித்த அதிகாரிகள்!
Published on

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றார். தலைமைச்செயலகத்தில் அவர் செய்யும் அன்றாட விஷயங்கள் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் சார்பில் 2025 இல் முன்மாதிரி மாநிலம் என தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட விருதை முதல்வர் விஜயிடம் அதிகாரிகள் காண்பித்து வாழ்த்து பெற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

கடந்த திமுக ஆட்சியின்போது 2025 இல் மாநிலங்களுக்கிடையே சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் கடலோர மாநிலங்களுக்கான பிரிவில் இந்த முன்மாதிரி விருது வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com