சென்னையை குளிர்வித்த கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் திடீரென மழை பெய்தது.
சென்னையை குளிர்வித்த கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
Published on

தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னையில் இன்று 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் திடீரென மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com