அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.
அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
Published on

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அரசுப் பள்ளியில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. காலை உணவை 80 மாணவர்கள் சாப்பிட்டனர்.

சிறிது நேரம் கழித்து காலை உணவு சாப்பிட்ட 16 மாணவர்கள் வயிறு வலிப்பதாக கூறினர். மற்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com