அடுத்த 5 ஆண்டுகளில் துறைவாரியான வளர்ச்சி இலக்குகள்- முதலமைச்சர் வெளியிட்ட STALIN STATEMENT..!

அடுத்த 5 ஆண்டுகளில் துறை வாரியாக நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் துறைவாரியான வளர்ச்சி இலக்குகள்- முதலமைச்சர் வெளியிட்ட STALIN STATEMENT..!
Published on

அடுத்த 5 ஆண்டுகளில் துறை வாரியாக நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும்!

அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட் என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன்.

இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!

ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்

* ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம்.

*தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.

*கால்நடை - பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பால் உற்பத்தி உயர்வு - மீனவர்கள் வாழ்வு மேம்பாடு.

*நகராட்சி நிருவாகத் துறை சார்பில் உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்.

*சிறு - குறு நடுத்தரத் தொழில் துறை சார்பில், 5 சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்.

*நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பான நவீன சாலை தொழில்நுட்பம்.

*கைத்தறி மற்றும் ஜவுளித்துறை சார்பில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பான திட்டங்கள்

* வீட்டு வசதித்துறையின் சார்பில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேர்த்து 7 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

*மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு.

*வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்.

*பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், லைப்ரரி 5.0, வெற்றிப்பள்ளிகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்.

*உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் 2.0 திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்.

*பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பொருளாதார முன்னேற்றம்.

*ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com