பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

வாட்ஸ்-அப் செயலி (ஆப்) வழியாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
Published on

சென்னை:

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரர் ராஜ்மோகன் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்-அப் செயலி (ஆப்) வழியாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com