

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் ஏப்.23ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவும், மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக ஜவஹர், பெரம்பலூர் பிரபாகர், தஞ்சை சுந்தரவதனம், தென்காசிக்கு மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.