

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி. நாகர்கோவிலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.45 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06196) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.