கோடை விடுமுறையை முன்னிட்டு எழும்பூர்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

எழும்பூர்-கன்னியாகுமரி, ஈரோடு-சென்னை சென்ட்ரல், போத்தனூர்-சென்னை சென்ட்ரல், தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு எழும்பூர்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை:

கோடை விடுமுறையை முன்னிட்டு எழும்பூர்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறையை முன்னிட்டு, எழும்பூர்-கன்னியாகுமரி, ஈரோடு-சென்னை சென்ட்ரல், போத்தனூர்-சென்னை சென்ட்ரல், தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06045), மறுநாள் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வருகிற 3-ந்தேதி இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06046), மறுநாள் காலை 11.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

* ஈரோட்டில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.20 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (06026), அதேநாள் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் வரும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.

* போத்தனூரில் இருந்து வருகிற 2,3 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (06028), அதேநாள் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 2,3 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் வரும் சிறப்பு ரெயில் (06027) மறுநாள் காலை 5.15 மணிக்கு வந்தடையும்.

* தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தென்காசி வரும் சிறப்பு ரெயில் (06089), மறுநாள் காலை 10 மணிக்கு தென்காசி சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வருகிற 3-ந்தேதி இரவு 9.30 புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06090), மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com