தொடர் விடுமுறையை முன்னிட்டு 2 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு  2 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை:

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 23-ந் தேதி முகூர்த்தம், 24-ந் தேதி சனிக்கிழமை, 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26-ந் தேதியன்று கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற 23, 24-ந் தேதி ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை மறுநாள் 23-ந் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 24-ந் தேதி (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் 485 பஸ்களும், மற்றும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26ம் தேதி திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23-ந் தேதி மற்றும் 24-ந் தேதியன்று 70 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும், திங்கட்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com