சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சித்ரா பவுர்ணமி வரும் 1-ம் தேதி வருகிறது.
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
Published on

தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு பஸ்கள் சென்னை, வேலூர், திருத்தணி, காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிதம்பரம், விழுப்புரம், ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. சித்ரா பவுர்ணமி வரும் 1-ம் தேதி வருகிறது.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

வரும் 30-ம் தேதி இரவு 9 மணி முதல் மே 1-ம் தேதி இரவு 11.07 மணி வரை திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கம்.

கிளாம்பாக்கத்தில் இருந்து 30-ம் தேதி 548 பேருந்துகளும், மே 1-ம் தேதி 565 பேருந்துகளும் இயக்கம்.

மாதவரத்தில் இருந்து 30-ம் தேதி 186 பேருந்துகளும், மே 1-ம் தேதி 174 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com