என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆளுநரின் மைக் ஆப் செய்யப்பட்டது, ஆனால்... சபாநாயகர் அப்பாவு விளக்கம்
- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில் இப்படி நடந்து கொள்வார்களா?
- சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் மரபு என்றும் மாற்றப்படாது.
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கியது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என குற்றம்சாட்டி, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
இந்நிலையில் சட்டசபையில் நடந்தது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டத்தொடருக்கு ஆளுநரை நேரில் சென்று அழைத்தோம். பேரவையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
* மிகவும் தாழ்ந்த குரலில் தான் உரையை வாசிக்குமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
* சட்டசபையின் முதல்நாள் கூட்டத்தில் மாநில அரசின் அறிக்கையை வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.
* அரசின் நிறை குறையை ஆளுநர் பேசலாமா, ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசலாம்.
* உரையை வாசிக்காமல் ஆளுநர் கிளம்பியதால் நான் மைக்கில் வேண்டுகோள் விடுத்தேன். அப்போது ஆளுநர் மைக் ஆப் செய்யப்பட்டது.
* ஆளுநர் பேசும்போது அனைவரது மைக்கும் ஆப் செய்யப்படும். நான் பேசும்போது ஆளுநர் உள்ளிட்டோர் மைக் ஆப் செய்யப்படும்.
* நான் பேசும்போது மற்றவர்களுக்கு தெளிவாக கேட்கத்தான் ஆளுநர் மைக் ஆப் செய்யப்பட்டது. இது மரபு தான். எந்த மரபையும் மீறவில்லை.
* தமிழ்நாட்டின் ஆளுநரிடம் இருந்து சட்டசபையின் மாண்பு காக்கப்பட்டுள்ளது.
* பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில் இப்படி நடந்து கொள்வார்களா?
* சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் மரபு என்றும் மாற்றப்படாது.
* யாருக்கும் பயந்து தமிழ்நாடு சட்டசபையின் மரபு என்றும் மாற்றப்படாது என்று கூறினார்.






