இபிஎஸ் எடுத்து வரும் நடவடிக்கைகள் செல்லாது - எஸ்.பி.வேலுமணி

பொதுச்செயலாளர் நீக்கியது செல்லாது, நீக்கியதாக சொன்னவர்கள் எல்லாம் அந்த பதவிகளில் தொடர்வார்கள்.
இபிஎஸ் எடுத்து வரும் நடவடிக்கைகள் செல்லாது - எஸ்.பி.வேலுமணி
Published on

அதிமுக தலைமைக்கு எதிராக குரல் எழுப்பி உள்ள வேலுமணி அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:

* இபிஎஸ் உள்ளிட்ட 22 பேர் கொறடா உத்தரவை மதிக்கவில்லை.

* இபிஎஸ் உள்ளிட்ட 22 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தான் விதி.

* இபிஎஸ் எடுத்துள்ள எந்த நடவடிக்கையும் செல்லாது என மக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

* பொதுக்குழுவை கூட்டி தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும்.

* கடந்த 11-ந்தேதி யார் எந்த பொறுப்பில் இருந்தார்களோ அதே பொறுப்பே தொடரும்.

* தற்போது இபிஎஸ் எடுத்து வரும் நடவடிக்கைகள் செல்லாது.

* கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரையும் நீக்க முடியாது என்பதே சட்டம்.

* பொதுச்செயலாளர் நீக்கியது செல்லாது, நீக்கியதாக சொன்னவர்கள் எல்லாம் அந்த பதவிகளில் தொடர்வார்கள்.

* சட்டமன்றம் அமைப்பு என்பது தனி, கட்சி அமைப்பு என்பது தனி.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com