ரெயில் பயணிகள் கவனத்திற்கு.. வைகை அதிவிரைவு ரெயில் 4 நாட்கள் தாமதமாக செல்லும்

தண்டவாளங்களில் பாரமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரெயில் பயணிகள் கவனத்திற்கு.. வைகை அதிவிரைவு ரெயில் 4 நாட்கள் தாமதமாக செல்லும்
Published on

தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

சென்னை ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட தண்டவாளங்களில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்காரணமாக எழும்பூரிலிருந்து தினமும் பிற்பகல் 1.15 மணிக்கு மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரெயில் (எண்: 12635) குறிப்பிட்ட நாள்களில் வழக்கமான வேகத்தைவிட மெதுவாக இயக்கப்படும். அதன்படி, இந்த ரெயில்கள் வருகிற 16-ந் தேதி 1.10 மணி நேரம் தாமதமாகவும், 18, 20 ஆகிய தேதிகளில் 1.15 மணி நேரம் தாமதமாகவும், 29-ந் தேதி 1.30 மணி நேரம் தாமதமாகவும் மதுரை சென்றடையும்.

அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.20 மணிக்கு சாய்நகர் ஷீரடி செல்லும் அதிவிரைவு ரெயில் (எண் 22601) வருகிற 22-ந் தேதி 1.30 மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com