வேளாங்கண்ணி-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
வேளாங்கண்ணி-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறையை முன்னிட்டு, திருவனந்தபுரம் வடக்கு-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் வடக்கில் இருந்து வருகிற 13,20,27 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06031), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 14,21,28 ஆகிய தேதிகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் வடக்கு செல்லும் சிறப்பு ரெயில் (06032), மறுநாள் காலை 5.45 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com