

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை விடுமுறையை முன்னிட்டு, போத்தனூர்-திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 3,10 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06079), மறுநாள் காலை 6.45 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.
மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வருகிற 4,11 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் வடக்கு செல்லும் சிறப்பு ரெயில் (06080), மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.