திருப்பதி-சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16779), திருப்பதி-சந்திரகிரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சந்திரகிரியில் இருந்து இயக்கப்படும்.
திருப்பதி-சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி பணிமனையில் வருகிற மே 2-ந்தேதி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* திருப்பதியில் இருந்து வருகிற மே 2-ந்தேதி வரையில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.16853), காலை 10.35 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயிலும் (67207), திருப்பதி-சந்திரகிரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சந்திரகிரியில் இருந்து இயக்கப்படும். இந்த ரெயில்கள் நேற்றும் பகுதி நேர ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதியில் இருந்து வருகிற 2-ந்தேதி வரையில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16054), திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, ரேணிகுண்டாவில் இருந்து இயக்கப்படும். இந்த ரெயில் நேற்றும் பகுதி நேர ரத்து செய்யப்பட்டது.

* திருப்பதியில் இருந்து இன்று (புதன்கிழமை), மே 2 ஆகிய தேதிகளில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22615), காலை 11.55 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16779), திருப்பதி-சந்திரகிரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சந்திரகிரியில் இருந்து இயக்கப்படும். இந்த ரெயில்கள் நேற்றும் பகுதி நேர ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com