

திருவனந்தபுரம், மதுரை மற்றும் சேலம் கோட்டங்களில் நடைபெற உள்ள தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளா இடையே இயங்கும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
* சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127) ஜூலை 10-ந்தேதி 1 மணி 20 நிமிடங்களும், ஜூலை 5, 7, 12, 14 மற்றும் ஆகஸ்டு 4 ஆகிய தேதிகளில் 1 மணி 50 நிமிடங்களும், ஜூலை 17, 19, 21, 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் 2 மணி 15 நிமிடங்களும், ஆகஸ்டு 9-ந்தேதி 55 நிமிடங்களும் தேவைக்கேற்ப தாமதமாக புறப்பட்டு செல்லும்.
* தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20691) ஜூலை 29-ந்தேதி வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் வாஞ்சிமணியாச்சி வரை மட்டும் செல்லும்.
* மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20692) ஜூலை 30-ந்தேதி நாகர்கோவில்-நெல்லை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும்.
குறிப்பிட்ட இந்த தேதிகளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், ரெயில்களின் இந்த நேர மாற்றத்தை மனதில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.