எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் நாகர்கோவிலில் இருந்து 1 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.
வந்தே பாரத் ரெயில்
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 30-ந்தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரெயில் (வண்டி எண்.20627), அதற்கு மாற்றாக சென்னை எழும்பூரில் இருந்து 45 நிமிடம் தாமதமாக காலை 5.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும்.

* இதேபோல, நாகர்கோவிலில் இருந்து வருகிற 30-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), நாகர்கோவிலில் இருந்து 1 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com