சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.56, 11.40, மதியம் 12.28 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் காட்டாங்குளத்தூர் பணிமனையில் இன்று (செவ்வாய்கிழமை), 21 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணி முதல் மாலை 3 மணி வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.56, 11.40, மதியம் 12.28 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து மதியம் 12, 1.10, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையேயும், செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையேயும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com