

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றினார்.
திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்த முயன்றும் திமுகவினர் கேட்கவில்லை. மேலும் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து தனது பேச்சை தொடர்ந்தார்.
சமூக நீதி அரசு என்று கூறுபவர்கள் கடந்த ஆட்சியில் எத்தனை தலித் சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பினார்.
தவெக ஆட்சியில் தலித் சகோதரர்கள் 8 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கூறியபடி அமைச்சரவையில் தற்போது பங்கு பெற்றுள்ளனர். தவெக அனைவரையும் சகோதரத்துவத்துடன் நடத்தும் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.