TN Assembly Election | தி.மு.க. கூட்டணியில்தான் தேர்தலை சந்திப்போம் - சண்முகம்

6 தொகுதிகள் வேண்டுமென எங்களது மாநில குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
TN Assembly Election | தி.மு.க. கூட்டணியில்தான் தேர்தலை சந்திப்போம் - சண்முகம்
Published on

சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* 5 தொகுதிகளுக்கு சம்மதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

* 6 தொகுதிகள் வேண்டுமென எங்களது மாநில குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.

* முதலமைச்சரின் வேண்டுகோள் குறித்து மாநில அளவில் பேசி முடிவெடுப்போம்.

* 2026-ல் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்துதான் சிபிஎம் தேர்தலை சந்திக்கும்.

* சென்னையில் கட்டாயம் சிபிஎம் போட்டியிடும்.

* தொகுதி எண்ணிக்கையில் தான் சிக்கல். கூட்டணியில் சிக்கல் இல்லை

* கூடுதல் சீட்டுக்காக கூட்டணி மாற மாட்டோம்.

* 6 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com